நாரையூர் (திருநாரையூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க





மரம்: புன்னை மரம்
குளம்: காருண்ய தீர்த்தம்

பதிகங்கள்: உரையினில் -2 -86 திருஞானசம்பந்தர்
காம்பினை -3 -102 திருஞானசம்பந்தர்
கடலிடை -3 -107 திருஞானசம்பந்தர்
வீறுதானு -5 -55 திருநாவுக்கரசர்
சொல்லானைப் -6 -74 திருநாவுக்கரசர்

முகவரி: நாச்சியார்கோயில் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612102
தொபே. 0435 2467343

நாரை பூசித்துப் பேறுபெற்றதால் இப்பெயர் பெற்றது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயிலுக்குப் போகும் பேருந்து வழியில் 5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.காவிரிக்கு வடகரையிலுள்ள 33ஆவது தலமாகும். இறைவரின் திருப்பெயர் சௌந்தரேசுவரர். இறைவியாரின் திருப்பெயர் திரிபுரசுந்தரி.

திருத்தொண்டர் திருவந்தாதியைப்பாடிய நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த திருப்பதி இது. தேவாரத் திருமுறைகள் கனக சபையின் மேல்பாலுள்ள ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாய் வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலமும் இதுவேயாகும்.

பொள்ளா என்பது பொல்லா என்று வந்துள்ளது. பொள்ளாதது என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. எனவே சுயம்பு மூர்த்தியாகும். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம்3, அப்பர் பதிகம்2, ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.

பொல்லாப்பிள்ளையார்தனிமண்டபம் , மகாமண்டபத்தில் ஆறுமுகருடைய உருவம் கல்லில் செதுக்கப்பட்டது. அருகில் சித்தல புரம் இருக்கிறது. நம்பியாண்டார்நம்பி இராஜராஜசோழன் உருவங்கள் மகாமண்டபத்தில் இருக்கின்றன. கோயில் விமானம் அர்த்தசந்திர விமானம், விமானத்தின் உச்சியில் இரண்டு கலசங்கள் உண்டு. பிரகாரம் 204-370மதில் உயரம் 9 அடி, அம்பிகை தெற்குமுகம் அபயகுல ராசராசர் திருமுறை வகுக்கும்படி சொன்ன இடம். நம்பியாண்டார்நம்பி வகுத்தது. இருவர் விக்கிரகங்களும் உண்டு. திருமுறை கண்டபுராணம் காண்க.



கல்வெட்டு:

கல்வெட்டுக்கள் 4-கிடைத்தன. கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. திருநாரையூர் - தனியூரான் வீர நாராயண சலம் சேர்ந்த ஒருபிடாகை. தனியூர் ஆய ஆட்சி குலோத்துங்கசோழன் சந்தி விளக்குக்காக ஊர் ஒன்று தந்தான். கைலாசமுடையார்க்கு நித்திய நிவந்தத்திற்காகப் பொருள் இல்லாமையினால் ஆண்டு ஒன்றுக்கு 540 கலம் நெல் தரக்கூடிய நிலதானம் விக்கிரம சோழனால் தரப்பட்டது. குற்றம் தீர்த்த தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன. பசு திருடியதைச் சபையோர் விசாரித்து அவனிடமிருந்து பசுவும் கன்றுகளும் மீட்கப்பட்டன. கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1250இல் 60மா, நிலம் விற்கப்பட்டது.

 
 
சிற்பி சிற்பி