நனிபள்ளி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மலையான்மடந்தை உடனுறை நற்றுணையப்பர்


மரம்: வில்வம்
குளம்: சொர்ண தீர்த்தம்

பதிகங்கள்: காரைகள் -2 -84 திருஞானசம்பந்தர்
முற்றுணையாயி -4 -70 திருநாவுக்கரசர்
ஆதியன் -7 -97 சுந்தரர்

முகவரி: கிடாரங்கொண்டான் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609304
தொபே. 04364 283188

இது திருஞானசம்பந்த சுவாமிகளுடைய அருமைத் தாயாரின் பிறப்பகம். இது இக்காலம் புஞ்சை கடாரங்கொண்டான் என்று வழங்கப்பெறுகின்றது.

இது காவிரிக்குத் தென்கரையில் உள்ள 43-ஆவது தலமாகும். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவரின் திருப்பெயர் நற்றுணையப்பர். இறைவியாரின் திருப்பெயர் மலையான்மடந்தை. இத்தலம் முன் பாலைநிலமாய் இருந்தது. ஞானசம்பந்தப் பெருந்தகையார் இதை நெய்தல் நிலமாகுமாறு பாடினார். பின்னர் இதையே கானகமும் வயலுமாக ஆக்கினர். இச்செய்தி,

``நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே
போதின் மலிவயல் ஆக்கிய கோன்``
என்னும் பதினொன்றாந் திருமுறையிலுள்ள ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் (செய்யுள் 17) கூறப்பெற்றுள்ளது.

ஞானசம்பந்தர் பாலையை நெய்தலாகப்பாடியதை ``பாலை நெய்தல் பாடியதும்`` என்னும் திருக்களிற்றுப்படியார் பாடலாலும் அறியலாம். இக்கோயிலுக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று, சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. திருநாவுக்கரசு நாயனார் இக்கோயில் பதிகம் ஐந்தாம் திருப்பாட்டில் சமணர்கள், தமக்கு நஞ்சு கலந்த சோறு கொடுத்ததை,

``வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலாவமணர் தந்த
நஞ்சமுதாக்கு வித்தார் நனிபள்ளியடிகளாரே``
எனக் குறித்துள்ளார்கள்.



கல்வெட்டு:

18 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. விஜயநகர அரசரைத் தவிர மற்றவை 17-உம் சோழர்களுடையனவே, இராஜராஜன் முதல் குலோத்துங்கன் வரலாறு இருக்கின்றன. விஜய நகரத்துக் கிருஷ்ணதேவராயன் (1439 சகம்) உத்தரவோடும் அவன் மெய்க்கீர்த்திகளைக் கூறி சில கிராமக் கோயில்களின் வரி தள்ளுபடி செய்யப்பட்டது.

இக்கோயில் உள்ள கிராமம் கிடாரம் கொண்டான் என்ற பெயரில் ஏற்பட்டதால் இராஜேந்திரனின் I இன் வீரத்தைக் குறிக்கும். ஆகவே சோழர் பெருமை இங்கு நன்கு விளங்குகிறது. இவ்வூர் ஜயங் கொண்ட சோழ வளநாட்டு ஆக்கூர் நாட்டுப் பிரமதேசம் ஆகிய திருநனிபள்ளி ஆகும்.

தலைச்சங்காட்டு மூன்று பெருமாள் கோயில்களுக்கு முன் சேர்ந்த 10 வேலி நிலமும் அர்ச்சனா போகமாகத் திருஞானசம்பந்த நல்லூர் என்ற பெயரில் உடைய பிள்ளையாருக்குத் தரப்பட்டது குலோத்துங்கன் காலத்திலாகும்.

விக்கிரமசோழன் காலத்தில் மும்முடிச் சோழன் காலத்தில் மும்முடிச் சோழன் பேரம்பலத்தில் தலைச்சங்காட்டு மூலபுருஷர் கூடிட இளவரசி சொற்படி வெற்றிலை முளைக்கவும் இன்றி, ஆனை வைக்கவும் இராசராச நல்லூரில் பூதானம் செய்யப்பட்டது.

இராஜேந்திரன் காலத்தில் ரிஷபவாகன தேவர்க்குத் திருவிழா நடத்துவதற்காக இறையிலிசெய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இவைகளைப் போல ஆடவல்லான் முதலிய மூர்த்திகளுக்கும் தானங்கள் செய்யப்பட்டன. வைகாசியில் பிராமண போஜனத்திற்குத் தானங்கள் செய்து நிலத்தகராறில் தீப்புகுந்த நான்கு குடிகள் போல உருவங்கள் செய்து வைக்க 200 காசு கொடுக்கப்பட்டது. கொல்லர் முதலிய அறு நாமாதகார்களுக்குச் சில உரிமைகள் தரப்பட்டன.

திருவம்பலமுடையார் சேவைக்காக 80 காசு தரப்பட்டது. திருவாளங்குள முடையாருக்கு அவிர் பலிக்காக 2 1/2 வேலி தரப் பட்டது. பொற் பிரவாவி தீர்த்தத்து நீர் நற்றுணையாண்டார் நந்தவனத்திற்கன்றி வேறு நீர்ப் பாய்ச்சலுக்கு உதவக்கூடாது.

 
 
சிற்பி சிற்பி