அன்பிலாலந்துறை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சத்தியவாகீசர்

மரம்: ஆலமரம்
குளம்: சந்திரபுட்கரணி

பதிகங்கள்: கணைநீடெரி -1 -33 திருஞானசம்பந்தர்
வானஞ்சேர் -5-80 திருநாவுக்கரசர்

முகவரி: அன்பில் அஞ்சல்,
திருச்சி மாவட்டம், 621702
தொபே. 0431 2544927

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். திருச்சிராப்பள்ளிக்கு அருகே லால்குடிக்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது. திருச்சிராப்பள்ளி, லால்குடி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

அன்பில் என்பது தலப்பெயர். ஆலந்துறை என்பது கோயில் பெயர். பிரமதேவர், வாகீச முனிவர் முதலியோர் பூசித்த தலம். இது கொள்ளிடக்கரையில் உள்ளது திருஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தெழுந்தருளியிருந்தபோது, கொள்ளிடம் நீர்ப்பெருக்காய் இருந்ததாகவும், இக்கரையில் இருந்தே பாடியதாகவும், இறைவன் ஆணையின்வண்ணம் விநாயகர் காதைச் சாய்த்துக் கேட்டதாகவும் ஒரு கர்ணபரம்பரைச் செய்தியுண்டு.

அதற்கேற்ப தலவிநாயகர் திருவுருவம் முடிசாய்த்துச் செவி சாய்த்துக் கேட்கின்ற பாவனையில் அமைந்திருக்கிறது.

சத்தியலோகவாசியாகிய பிரமனும், வாகீசரும் பூசித்தமையால் சத்தியவாகீசர் என்ற பெயர் போலும்.


கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றியனவாக 1902 - இல் படியெடுக்கப் பட்டவை பதின்மூன்று கல்வெட்டுக்களும், 1938 - இல் எடுக்கப் பட்டவை ஆறும் உள்ளன. அவற்றில் ஏழு கல்வெட்டுக்கள் திருமால் கோயிலில் உள்ளவை.

ஏனையவை சத்தியவாகீசரைப் பற்றியன. கல்வெட்டுகளில் இறைவன்பெயர் பிரமபுரீசுவரர் என வழங்கப் பெறுகிறது. மாறவர்மன் குலசேகரபாண்டியன், மூன்றாம் இராஜேந்திர சோழன், ஹொய்சள வீரராமநாததேவர், மதுரைகொண்ட பரகேசரி வர்மன், இராஜராஜதேவன் முதலியவர்கள் காலத்தனவாகக் காணப்படுகின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் நிபந்தம் அளிக்கப்பெற்றமையை அறிவிக்கின்றன.(-595 to 601 of 1902)

 
 
சிற்பி சிற்பி