திலதைப்பதி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பொற்கொடியம்மை உடனுறை மதிமுத்தர்


மரம்: மந்தாரம்
குளம்: சந்திரதீர்த்தம்

பதிகம்: பொடிகள்பூசி -2 -118 திருஞானசம்பந்தர்

முகவரி: பூந்தோட்டம் அஞ்சல்
பேரளம்
திருவாரூர் மாவட்டம் 609405
தொபே. 9444836526

இராம இலக்குமணர்கள், தசரதச் சக்கரவர்த்திக்கு எள்ளும் புனலும் இறைத்த (திலதர்ப்பணஞ்செய்த) பதியாதலின் இப்பெயர் பெற்றது என்பர்.

பேரளம் தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே, 5.கி.மீ. தூரத்தில் (பூந்தோட்டத்திற்குத் தெற்கே ஒரு கல்தூரத்தில்,) அரிசிலாற்றின் தென்கரையில் இருக்கின்றது. சிதலைப்பதி என வழங்கும் ஊருக்கு, முக்கால் மைல் தூரத்தில் இருக்கின்றது. காவிரித் தென்கரைத் தலங்களுள் 58-ஆவது ஆகும்.

ஊரின் பெயர் திலதைப்பதி எனவும் அது வழங்குகிறது. ஆயினும், இங்குள்ள கோயிலின் பெயர் மதிமுத்தம் என்பதாம்.

இறைவரின் திருப்பெயர் மதிமுத்தர். இவ்வூர்ப்பதிகத்தின் இறுதிப்பாட்டில் ``திலதை மதிமுத்தர் மேல்`` எனவரும் தேவாரப் பகுதி இதனை வலியுறுத்தும். இறைவியாரின் திருப்பெயர் பொற்கொடி நாயகி, பொற்கொடியம்மை.

தலவிருட்சம் மந்தாரம்.

தீர்த்தம் சந்திரதீர்த்தம்.

``புரவியேழும் மணிபூண்டியங்குங் கொடித்தேரினான்

பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டியூர்``

என்னும் இவ்வூர்த் தேவாரப்பகுதி சூரியன் பூசித்துப் பேறு பெற்றதை உணர்த்துகின்றது. இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் பதிகம் உள்ளது.

இத்தலத்திற்குப் புராணம் இருக்கிறது. அது நாகலிங்கம் பிள்ளையால் இயற்றப்பெற்றது. அச்சில் வெளிவந்துள்ளது.




கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி