தலைச்சங்காடு
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சங்கருணாதேசுவரர்


மரம்: புரசு
குளம்: காவிரி, சங்கு தீர்த்தம்

பதிகம்: நலச்சங்க -2 -55 திருஞானசம்பந்தர்

முகவரி: ஆக்கூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609301
தொபே. 04364 280757

இவ்வூர் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருப்பதால் மிகப் பழமைவாய்ந்ததாகும். இவ்வூர் தலைசை என மரூஉமொழியாக வழங்கப்பெறும்.

காவிரித் தென்கரையில் உள்ள தலங்களுள் நாற்பத்தைந் தாவது ஆகும். மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் முக்கூட்டு சென்று அங்கிருந்து சீகாழி பூம்புகார் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். இறைவரது திருப்பெயர் சங்கருணாதேசுவரர். இறைவியாரது திருப்பெயர் சௌந்தரநாயகி. தீர்த்தம் காவிரியாறு.

திருமால் சிவபெருமானைப் பூசித்துப் பாஞ்சசந்யம் என்னும் சங்கைப் பெற்ற தலம். இதற்கு ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் ஒன்று உண்டு.



கல்வெட்டு:

இக்கோயிலில் பத்துக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. எல்லாம் சோழர்காலக் கல்வெட்டுக்களே. உத்தமச் சோழன் தாயார் செம்பியன் மாதேவியார் இவ்வூர்ப் பெருங் கோயிலுக்கு வெள்ளிப் பாத்திரங்கள் வழங்கியிருக்கிறார்கள். இவ்வூர் திருவேள்விக்குடி மகாதேவர்க்குப் பூதானம் செய்யப்பட்டது. செயங்கொண்டநல்லூர்ச் சபையார் மூன்று சிவாலயங்களுக்கு மூன்றுவேலி விளைநிலங்கள் நிபந்தனைமீது தந்தார்கள். காப்பாளர்களுக்கு வீடுகட்ட நான்குவேலி நிலம் கொடுக்கப்பட்டது. அதனை விற்கக்கூடாது. வெகுகாலமாக தீர்வை செலுத்தாத தேவதான நிலத்தைத் திருநாமத்துக் காணியாக மாற்றப் பட்டது. கோயில் நிர்வாகிகள் நிரந்தர மில்லாது ஆண்டுத் திட்டத்திற்கு மாற்றப்பட்டனர். பழைய ஆலயங்கள் கெட்டுப்போக அநுபவ பாத்தியங்கொண்டு நிலங்கள் திரப்படுத்தப்பட்டன.

 
 
சிற்பி சிற்பி