சேறை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு ஞானவல்லியம்மை உடனுறை செந்நெறியப்பர்


மரம்: மாவிலங்கை
குளம்: மார்க்கண்டேய தீர்த்தம்

பதிகங்கள்: முறியுறு -3 -86 திருஞானசம்பந்தர்
பெருந்திருஇம -4 -73 திருநாவுக்கரசர்
பூரியாவரும் -5 -77 திருநாவுக்கரசர்

முகவரி: திருச்சேறை அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612605
தொபே. 04366 2467759

இது உடையார் கோயில் என்று வழங்கப்பெறுகின்றது. இது கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 15 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. பேருந்து வசதி உள்ளது. இறைவரின் திருப்பெயர் - செந்நெறியப்பர். இறைவியின் திருப்பெயர் - ஞானவல்லி. தௌமிய ரிஷி பூசித்துப் பேறுபெற்றதலம். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு திருப்பதிகங்கள் இருக்கின்றன.

இவ்வூர்க் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் ஐந்தாமாண்டிலும் 27ஆம் ஆண்டிலும் பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவரின் திருப்பெயர் திருச்செந்நெறியுடையார் என்று குறிக்கப் பெற்றுள்ளது. இறைவர் சித்திரை மாதத்துச் சுவாதி நட்சத்திரத்தில் இராசநாராயணப் பேராற்றுக்குத் தீர்த்தங்கொடுத்தற் பொருட்டு எழுந்தருளுவது உண்டு, இராசசுந்தரச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் நிலநிவந்தம் அளித்திருந்தனர். அச்சபையாரே இக் கோயிலில் உள்ள உமாமகேஸ்வர தேவர்க்கும் இறையிலியாக நிலநிவந்தம் அளித்திருந்தனர்.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1931-32, No. 141-142.)



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி