சிற்றேமம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மானார்விழிநன்மாது உடனுறை சிற்றேமமுடையமகாதேவர்


மரம்: ஆத்தி
குளம்: சொர்ண தீர்த்தம்

பதிகம்: நிறைவெண்டி -3 -42 திருஞானசம்பந்தர்

முகவரி: சித்தாய்மூர் அஞ்சல்
பொன்னிரை
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610203
தொபே. 04366 247846

இது பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் உள்ள திருச்சிற்றம்பலம் என்னும் ஊராகும். இக்கோயிலுள்ள பழைய கல்வெட்டுக்கள் எல்லாம் இவ்வூரைச் சிற்றேமம் என்றே குறிப்பிடுகின்றன.

இறைவர் திருப்பெயர் - சிற்றேமமுடையமகாதேவர். இறைவியின் திருப்பெயர் - மானார்விழிநன்மாது. இப்பெயர் இவ்வூர்ப்பதிகத்தில் ``திருவாருஞ்சிற்றேமத்தான் `மானார்விழி நன்மாதொடும்` மகிழ்ந்தமைந்தனல்லானே`` எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது.

குறிப்பு:

திருத்துறைப்பூண்டி வட்டத்தில் பொன்னிரை என்னும் தொடர் வண்டி நிலையத்திற்கு வடக்கே 6 கி.மீ.தூரத்திலுள்ள சிற்றாய் மூரைத் திருச்சிற்றேமம் என்று மக்கள் வழங்குவது பெருந்தவறாகும். சிற்றாய்மூரிலுள்ள கல்வெட்டுக்கள் அவ்வூரைச் சிற்றாமூர் என்று கூறுகின்றன. அப்பர் சுவாமிகள் அவதரித்தருளிய திருவாமூரின் வேறு என்பதற்குச் சிற்றாமூர் என்று இது வழங்கப்பெற்றதாதல்வேண்டும்.



கல்வெட்டு:

இவ்வூர்க் கோயிலில் சோழ மன்னர்களில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜகேசரிவர்மன், இராஜேந்திர சோழ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியர்களில் வரகுண மகாராசன், வல்லப தேவனாகிய தெய்வ வீர பாண்டியன், மாறவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும்; விசயநகர வேந்தர்களில் வேங்கட பதி ராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக் கின்றன.

இக்கோயிலில் உள்ள மதுரைகொண்ட கோப்பரகேரி வர்மர், வரகுணமகாராசர், முதலானோர் கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் என்றும், சகம் 1381 அதாவது கி. பி. 1459 இல் ஏற்பட்ட கல்வெட்டில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றம்பலம் என்றும்; இறைவரின் திருப்பெயர் திருச்சிற்றேமத்து மகாதேவர், திருச்சிற்றேம முடையார், பழையவனத் தம்பிரானார், பழையவனப்பெருமாள் எனவும் கூறப்பெற்றுள்ளன. இங்குக் குறித்த இறைவரின் திருப்பெயர் களுள் பழையவனப் பெருமாள் என்பது மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்துக் கல்வெட்டிலும், பழையவனத் தம்பிரானார் என்பது வேங்கடபதிராயர் காலத்துக் கல்வெட்டிலும் குறிக்கப் பெற்றுள்ளன. இவ்வூர், இராஜராஜ வளநாட்டு, வெட்டாறுநாட்டுப் புன்றிற் கூற்றத்துக்கு உட்பட்டிருந்தது.

அம்மன் கோயில் மண்டபத்துத் தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டு, அத்தூண் முத்தன்ராமனாகிய முடியாள் புரியாரால் கொடுக்கப்பட்டது. என்பதைத் தெரிவிக்கின்றது. வீரபாண்டிய தேவரும், இத்தியூர்ச் சபையாரும், பிறரும் சிவபெருமானுக்கு நிலநிவந்தங்கள் அளித்திருந்தனர். இவ்வூர்க்குளத்திற்குத் தண்ணீர் வர, திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவர்காலத்தில் ஒரு வாய்க்கால் வெட்டப்பெற்றது.

 
 
சிற்பி சிற்பி