அழுந்தூர் (திருவழுந்தூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சௌந்தரியாம்பிகை உடனுறை வேதபுரீசுவரர்

மரம்: வில்வம்
குளம்: வேத தீர்த்தம்

பதிகம்: தொழுமாறு -2 -20 திருஞானசம்பந்தர்

முகவரி: தேரழுந்தூர் அஞ்சல்,
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம், 609001
தொபே. 04364 237690

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். நாகை மாவட்டம். மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள தேரழுந்தூர் தொடர்வண்டி நிலயத்தில் இறங்கி தெற்கே 3 கி.மீ. சென்றால் ஊரை அடையலாம். இது தென்கரைத் தலங்களுள் முப்பத்தெட்டாவது ஆகும்.

அகத்திய முனிவர் கீழே இறைவரைப் பூசித்திருந்ததை அறியாது ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாது அழுந்தியதால் இப்பெயர் பெற்றது என்பர்.

இது இக்காலம் தேரழுந்தூர் என்று வழங்கப்பெறுகின்ற பெயருக்கேற்றபடி இவ்வரலாறு தோற்றப்பெற்றது போலும். கம்பர் பிறந்த கம்பன் மேடு உள்ள இடம்.

வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர்கள், முனிவர்கள் இவர்கள் பூசித்துப் பேறு எய்தினர். இது திருஞானசம்பந்தருடைய ஒரேபதிகத்தைப் பெற்றது. இக்கோயில் ``மாமடம்`` எனப்படும் சிறப்பு இவ்வூர்த் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வூர் அழுந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப் பெறுவதுண்டு. இவ்வழக்கம் திருஞானசம்பந்தப்பெருந்தகையார் காலத்தே வழக்கில் இருந்தது என்பது அவர் தேவாரத்தால் அறியக் கிடக்கின்றது. இவ்வூர் மறையோர் இறைவனைத் தொழுது வழிபடுதலில் வல்லவர்.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள்(குறிப்பு: இக்கல்வெட்டுக்கள் படித்து எழுதப்பட்டன.) இருக்கின்றன. இவையனைத்தும் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தனவாகும். இவைகளில் இம்மன்னன் `திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும், ஈழமும், கருவூரும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டு வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் பண்ணியருளின திரிபுவன வீரதேவன்` எனவும், `மதுரையும், கருவூரும், ஈழமும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய ஷ்ரீ சோழ கேரளதேவன்` எனவும் போற்றப்பெற்றுள்ளன.

இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு ஜெயங்கொண்ட சோழவளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டுத் திருவழுந்தூர் என்று குறிக்கப்பெற்றுள்ளது. சிவபெருமானின் திருப்பெயர் திருவழுந்தூர் உடையார் திருமடமுடைய நாயனார் என்பதாகும்.

இக்கல்வெட்டுக்கள் திருமடமுடைய நாயனார்க்குக் காவிரி ஆற்றினின்று நித்தம் திருமஞ்சனம் கொண்டுவந்து திருமஞ்சன சாலையில் ஒடுக்கித் திருமஞ்சனம் பண்ணுவிக்கக் கடவதற்கு நிவந்தங்கள் அளித்த செய்திகளைப் புலப்படுத்துகின்றன.

 
 
சிற்பி சிற்பி