கோணமலை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மாதுமையாள் உடனுறை கோணேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: மகாசுனை

பதிகம்: நிரைகழலரவ -3 -123 திருஞானசம்பந்தர்

முகவரி: திருகோணமலை மாவட்டம்
இலங்கை

இது ஈழநாட்டுத் தலங்கள் இரண்டனுள் ஒன்று. இலங்கைத் தீவில் வடகிழக்கு மாகாணத் தலைநகர். தீவின் கிழக்குக் கரையோரத் துறைமுகப்பட்டினம். முன்னொரு காலத்தில், வாயுவுக்கும், ஆதிசேடனுக்கும் யார் வல்லமையுடையவர் என்னும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதுபொழுது சேடன் மேரு மலையைத் தன் உடலினால் பிணித்து நின்றான். வாயு தன்பலத்தினால் மேருச்சிகரங்களுள் மூன்றைப் பெயர்த்து எறிந்தான். அவைகள் திருக்காளத்தியிலும், திருச்சிராப்பள்ளியிலும், இங்கும் (திருக்கோணமலையிலும்) வீழ்ந்தன. அங்ஙனம் வடகயிலைப்பகுதியாகிய மேருமலையின் சிகரங்கள் வீழ்ந்த காரணத்தால் இவை தென்கயிலாயங்கள் எனப்பெற்றன. இச்செய்தியைச் செவ்வந்திப் புராணமும் குறிப்பிடுகின்றது. எனவே இத்திருக்கோணமலை தென் கயிலாயம் எனவும் பெயர் பெறும்.

இறைவர் திருப்பெயர் கோணேசுவரர். இறைவி திருப்பெயர் மாதுமையாள்.

திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இராமேச் சுரத்திலிருந்தே பாடியுள்ளனர்.

தேவேந்திரன் வழிபட்ட தலம். இதற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று இருக்கிறது. இத்தலத்திற்கு ஈழநாட்டரசர் சிங்கை செகராஜகேசரியார் இயற்றிய தட்சிண கைலாச புராணம் அச்சில் வெளிவந்துள்ளது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி