கோடிக்குழகர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மையார் தடங்கண்ணியம்மை உடனுறை அமிர்தகடேசர்


மரம்: வில்வம்
குளம்: அமுதவாரி

பதிகம்: கடிதாய்க் -7 -32 சுந்தரர்

முகவரி: கோடியக்காடு அஞ்சல்
வேதாரணியம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 614821

இது குழகர்கோயில் என்று இக்காலம் வழங்கப் பெறுகின்றது. திருமறைக்காட்டுக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள அகத்தியான்பள்ளிக்குச் சென்று அங்கிருந்து தெற்கே பதினோரு கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்து உண்டு மீதி யிருந்த அமுதை, வாயுவின் கையில் கொடுக்க அவர் அதை ஆகாய வீதியில் கொண்டு செல்கையில் கீழ்வீழ்ந்து இலிங்க உருவாய் அமைந்த தலம் என்பர். இறைவர்:- அமிர்தகடேசர். இறைவி:- மையார் தடங்கண்ணியம்மை. தீர்த்தம்:- அமுதவாரி.

கடற்காற்று வந்து வீசும் கடற்கரையில் இறைவர் தனித் திருப்பதைப்பற்றிச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வருந்துவதை இவ்வூர்ப் பதிகத்தில் காணலாம்.

`கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதான் அயலே இருந்தாற் குற்றமாமோ`
என்பது அவர் திருவாக்கு.



கல்வெட்டு:

இக்கோயிலில் கல்வெட்டு இல்லை. ஆனால் கடற்கரையில் சித்தர் ஆச்சிரமத்தில் மராட்டிய மொழியில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது தஞ்சாவூர் துளஜா மகாராஜா காலத்தில் ஏற்பட்டது. இத்துளஜா மகாராஜா பிரதாப சிம்ம மகாராஜாவின் மகனாவர். கோடியக்காட்டில் உள்ள கல்வெட்டு, திருக்கோடிக்குழகர், திருவகத்தியான்பள்ளி இவைகளைக் குறிப்பிடுகின்றது. அது ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்டானின் கல்வெட்டு.

 
 
சிற்பி சிற்பி