கோட்டாறு
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வண்டமர்பூங்குழலி உடனுறை ஐராவதேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: சூரிய தீர்த்தம்

பதிகங்கள்: கருந்தடங்கண் -2 -52 திருஞானசம்பந்தர்
வேதியன்விண் -3 -12 திருஞானசம்பந்தர்

முகவரி: கொட்டாரம் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம், 609703
தொபே. 04368 261447

பேரளம் - காரைக்கால் தொடர்வண்டிப் பாதையில் அம்பகரத்தூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 2 கி.மீ. தூரத்தில் இருக் கின்றது. இஃது இக்காலம் கொட்டாரம் என்று வழங்கப் பெறுகின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 53 ஆவது ஆகும். மயிலாடுதுறையை அடுத்த கொல்லுமாங்குடி - காரைக்கால் பேருந்து வழியில் கொட்டாரம் கைகாட்டியில் இறங்கி இவ்வூரை அடையலாம்.

இறைவரின் திருப்பெயர்:- ஐராவதேசுவரர். இறைவியாரின் திருப்பெயர்:- வண்டமர் பூங்குழலி. வெள்ளையானை பூசித்துப் பேறு பெற்றது. இச்செய்தி,
``நின்று மேய்ந்து நினைந்துமாகரி நீரொ டும்மலர்
வேண்டி வான்மழை
குன்றினேர்ந்து குத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்``

என்னும் இவ்வூர் ஞானசம்பந்தர் தேவாரப்பகுதியால் (பண் சீகாமரம்-பாடல் 2) அறியக்கிடக்கின்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.



கல்வெட்டு:

(See Travancore Archaelogical Series, Vol. VI, part I.)இக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர், இராஜராஜப் பாண்டிய நாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டாறான மும்முடிச் சோழநல்லூர் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருப்பெயர் இராஜேந்திரசோழீசுவரமுடைய மகாதேவர் என்பதாகும். இக் கோயிலைக் கட்டுவித்தவன் சோழமண்டலத்து மண்ணிநாட்டு முழையூருடையான் அரையன் மதுராந்தகனான குலோத்துங்கசோழ கேரள இராசன் ஆவன். இக்கோவிலில் குன்றமெறிந்த பிள்ளையாருக்கு நாச்சியாரை எழுந்தருளுவித்தவர், தேவரடியார் செங்கோடன் பூவாண்டியாவர். இது நிகழ்ந்தது கொல்லம் ஆண்டு 428 அதாவது கி.பி. 1253 ஆகும். இந்த இராஜேந்திரசோழீச்சரமுடையார் கோயிலின் மண்டபத்தைக் கட்டுவித்தவர் ஸ்ரீ கோயிலிற் பள்ளியுடைய பெரியான் குடிதாங்கியான சுந்தரபாண்டிய நாஞ்சில்நாடு ஆழ்வார் ஆவர். (இதில் பள்ளியுடையான் என்பது கோயில் கண் காணிப்பாளரைக் குறிப்பதாகும்.)

சடையவர்மன் சுந்தரசோழ பாண்டிய தேவரின் 11 ஆம் ஆண்டில் விஷ்ணுவர்த்தன மகாராஜாவாகிய சளுக்கு விஜயாதித்தன் விக்கண்ணன் இராஜேந்திர சோழீச்சரமுடையாருக்கு நிசதி உழக்கு நெய் அட்டுவதற்கு இருபத்தைந்து சாவாமூவாப் பசுவை வைத் துள்ளான். இம்மன்னனது இதே ஆண்டில் பெருந்தனத்துத்தேவன் விச்சாதிரனான சோழமாராயன் சாவாமூவாப் பேராடு ஐம்பதை நிசதம் உழக்கு நெய் வார்த்து ஒரு விளக்கு எரிப்பதற்கு வைத்துள்ளான். இம்மன்னனது இதே ஆண்டில் இராஜராஜத் தென்னாட்டுக்கொடுங் குளத்து ஆதித்தன் இரணசிங்கனான வீர பாண்டிய பல்லவரையன் நொந்தாவிளக்கினுக்கு ஐம்பது ஆடுகளை விட்டுள்ளான். இவ்வூரில் இருந்த பெண்தவசி நாற்பத்தெண்ணாயிரம் மறலிதேவி அரைவிளக்கு ஒன்றுக்குப் பன்னிரண்டு பசுக்களை விட்டிருந்தாள்.

``புகழ்சூழ்ந்த புணரி`` என்னும் தொடக்கமுள்ள மெய்க் கீர்த்தியையுடைய முதலாம் குலோத்துங்கசோழன் காஞ்சிபுரத்து அரண்மனையில் இருந்து ஆந்தாய்க்குடி என்னும் ஊரில் இராஜேந்திர சோழீச்சரமுடையாருக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு நாற்பத்தைந் தரையே மும்மாவரை நிலத்தை அளித்திருந்தான்.

 
 
சிற்பி சிற்பி