கோகரணம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கோகர்ணநாயகி உடனுறை மகாபலநாதர்


மரம்: வில்வம்
குளம்: கோடி தீர்த்தம்

பதிகங்கள்: என்றுமரி -3 -79 திருஞானசம்பந்தர்
சந்திரனும் -6 -49 திருநாவுக்கரசர்

முகவரி: திருக்கோகரணம் அஞ்சல்
கர்நாடகம் 576234
தொபே. 08386 257167

இராவணன் இலங்கையில் எழுந்தருளுவித்தற் பொருட்டு இலிங்கம் ஒன்றை இறைவனிடம் பெற்றுச் செல்கையில், தேவர்களின் வேண்டுகோளின்படி ஓர் உபாயத்தால் பிள்ளையார், அதை அவனிடமிருந்து வாங்கி, இப்பதியில் எழுந்தருளுவித்தார். இராவணன் தன்னால் கூடிய வரையில் அந்த இலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முயன்று இழுத்த பொழுது அது பசுவின்காதுபோல் குழைந்தமையால் இப்பெயர் பெற்றது என்பர்.

இது கர்நாடக மாநிலத்தில் வடகன்னடம் மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரிலிருந்து விரைவுப் பேருந்துகளில் இத்தலத்தை அடையலாம். தொடர்வண்டியிற் செல்வதாயின் சென்னையிலிருந்து ஹுப்ளி சென்று அங்கிருந்து பேருந்தில் இவ்வூரை அடையலாம். துளுவ நாட்டுத்தலம் இது ஒன்றேயாகும்.

இறைவர் திருப்பெயர் மகாபலநாதர். இறைவி திருப்பெயர் கோகர்ணநாயகி. தீர்த்தம் - கோடி தீர்த்தம். சிவராத்திரி நாளில் இங்குக் கோடிதீர்த்தத்தில் நீராடி, வழிபாடு செய்தல் மிகச்சிறந்தது என்று சிவராத்திரிபுராணம் செப்புகின்றது. இதற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி