அரிசிற்கரைப்புத்தூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சிவாம்பிகை உடனுறை படிக்காசு வைத்தபரமர்

மரம்: வில்வம்
குளம்: அரிசில் நதி

பதிகங்கள்: மின்னுஞ்சடை -2 -63 திருஞானசம்பந்தர்
முத்தூரும் -5 -61 திருநாவுக்கரசர்
மலைக்கும்மகள் -7 -9 சுந்தரர்

முகவரி: கிருட்டிணாபுரம்
சாக்கோட்டை
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612401
தொபே. 0435 2466939

இத்தலம் சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். கும்பகோணம் - நாச்சியார் கோயில் பேருந்தில் சென்றால் இவ்வூரை அடையலாம். இத்தலம் அழகாபுத்தூர் என வழங்குகிறது.

இந்தவூர் அழகார் புத்தூர் திருப்புத்தூர் என்றும் வழங்குகின்றது. அரிசில் நதி ஓடுகிறது. கோச் செங்கட்சோழன் திருப்பணி.

சொர்ணபுரீவர சுவாமி மேற்குப் பார்த்த சந்நிதி, சந்நிதித் தெரு, அழகானது. தென்னை மரங்களின் வரிசைகொண்டது.


கல்வெட்டு:

ஏழு கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. அவை எல்லாம் சோழர் காலத்தவை.

1. இராஜராஜன் 7-ஆம் ஆண்டில் திருப்புத்தூர் உடையார் பரமசுவாமிக்கு 1300 குழி நிலம் வழிபாட்டிற்காக விட்டான். அப்போது மூலகிருகம் கல்லால் படைக்கப்பெற்றது. ஊர்ப்பெயர் திருநாரையூர் நாட்டுப் பரமதேயமான பரதாயகுடி என்று கண்டிருக்கிறது.

2. அதே அரசனால் தனது 22ஆம் ஆண்டில் ஒரு விளக்குக்காக 3 மா. நிலம் கொடுக்கப்பட்டது.

3. அதே அரசனால் தனது 28ஆம் ஆண்டில் விளக்குத்தானம் செய்யப்பட்டது.

4. இராஜராஜன் காலத்தில் மேல்வேம்பாநாட்டு நல்லார் குடியினன் ஒருவன் சூரியதேவன் கோயில் கட்டினான் என்றும், அதற்கு வழிபாடு நடத்த முப்பது காசு தந்து அதற்கு 6 மா. நிலமும் விடப்பெற்றது என்றும் தெரிவிக்கிறது.

5. முதற்குலோத்துங்கன் காலத்தில் வழிபாட்டிற்காக நிலம் தரப்பட்டது.

6. விக்கிரமசோழன் (கி.பி.1125) காலத்தில் திருப்புத்தூர் அழகிய தேவருக்கு ஒருவிளக்குக்காகப் பணம் தரப்பெற்றது.

7. கோச்செங்கட்சோழன்: ஒருகல்வெட்டில் குலோத்துங்கச் சோழவளநாட்டு அழகார் திருப்புத்தூர் என்று ஊர்ப்பெயர் குறிக்கப் பெற்றுள்ளது.

 
 
சிற்பி சிற்பி