குரங்காடுதுறை(வட)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அழகுசடைமுடியம்மை உடனுறை தயாநிதீசுவரர்


மரம்: தென்னை மரம்
குளம்: காவிரி

பதிகம்: கோங்கமேகுரவமேகொழு -3 -91 திருஞானசம்பந்தர்

முகவரி: உள்ளிக்கடை அஞ்சல்
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 614202
தொபே. 04374 240491

குரங்கினால் பூசிக்கப்பெற்று காவிரிக்கு வடகரையில் இருப்பதால், இது வடகுரங்காடுதுறை என்னும் பெயர் பெற்றது.

இது கும்பகோணத்திலிருந்து திருவையாற்றிற்குப் போகும் பெருவழியில் இருக்கிறது. திருவையாற்றிலிருந்து வந்தால் கிழக்கே ஆறு மைல் தூரத்தில் இருக்கிறது. இறைவரின் திருப்பெயர் - அழகுசடைமுடிநாதர். இறைவியின் திருப்பெயர் - அழகுசடைமுடியம்மை. தீர்த்தம் - காவிரி.

வாலி வழிபட்டுப்பேறுபெற்ற தலம். இச்செய்தி ``கோலமா மலரொடு தூபமும் சாந்தமுங் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்`` என்னும் இத்தலப்பதிகச் செய்யுள் அடிகளால் விளங்கும். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது.

இவ்வூர்க் கோயிலில் சோழமன்னர்களில் கோப்பரகேசரி வர்மன், பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்க சோழன் இவர்கள் காலங்களிலும், பாண்டியரில் கோச்சடையபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டிய தேவன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

பரகேசரி வர்மர், பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மர் இவர்கள் காலங்களின் கல்வெட்டுக்கள் இவ்வூரை வடகரை, மிறைக்கூற்றத்து எயினனூர்த் திருக்குரங்காடுதுறை என்றும், முதலாம் இராஜராஜன் கல்வெட்டு, வடகரை விறைக்கூற்றத்துத் திருக்குரங்காடு துறை என்றும், மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்துக்கல்வெட்டு, வடகரை விக்கிரம சோழவளநாட்டு மிறைக்கூற்றத்துத் திருக்குரங்காடு துறை என்றும் கூறுகின்றன.

இறைவர், திருக்குரங்காடுதுறை ஆழ்வார், திருக்குரங்காடுதுறை மகாதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர். இக் கோயிலில் மூன்றாங்குலோத்துங்கசோழன் காலத்தில் விஸ்வேசரை எழுந்தருளுவித்து அவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு உடலாக விக்கிரமசோழவளநாட்டு, அண்டாட்டுக் கூற்றத்து இன்னம்பரான சோழகேரளநல்லூரில் விஸ்வேஸ்வரமயக்கல் என்று பேர் கூவப்பெற்ற மூன்றுவேலி நிலத்தை அளித்தவன் ஜெயசிங்க குலகாலவளநாட்டு மீசெங்கிளி நாட்டு ஆலங்குடையான் வேளான் பொன்னார் மேனியனான அனபாய விழுப்பரையன் ஆவன்.

இத்திருக்கோயிலின் திருநடை மாளிகைத் திருப்பணி எழுபத்தொன்பது வளநாட்டுப் பெரிய நாட்டாரும், பதினெண் விஷயத்தாரும் வரி வசூலித்துக்கட்டியதாகும்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி