012 பதிப்புரை
தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
வாக்கி னாற்சொல்ல வல்ல பிரான்எங்கள்
பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழான்அடி சென்னி யிருத்துவாம். -காஞ்சி புராணம், பாயிரம்
தில்லைப் பெருமான் `உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழார் அருளிய நூல், திருத்தொண்டர் புராணம் ஆகும். தெய்வம் மணக்கும் செய்யுள் எலாம் எனப் போற்றப்பெறும் சிறப்புடைய இந்நூல், சமய நூல்கள் பலவற்றுள்ளும் வரலாற்றுப் பின்னணியுடன் நாயன்மார்களின் பெருமைகளை விளங்க விரித்துரைத்து, சைவ சமய மரபுகளையும் தேவாரத் திருமுறைகளின் சிறப்புகளையும் தெரிவிக்கின்றது.
திருத்தொண்டர் புராணத்தின் மூல இலக்கியமாக விளங்குவது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையாகும். தமிழ் மக்கள் செய்த தவப்பயனாகத் திருத்தொண்டத் தொகை, தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்துள்ளது என்பதைச் சேக்கிழார்,
மாத வம்செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வாரவர் மேல்மனம் போக்கினார்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார். -தி. 12 சரு.1-1. 25
எனக் குறிப்பிட்டருள்கிறார். விரிநூலாக விளங்கும் திருத்தொண்டர்புராணத்தின் தொகைநூல் திருத்தொண்டத் தொகையும், வகை நூல் நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும் ஆகும்.
திருத்தொண்டர் புராணத்துள் குறிப்பிடப்பெறும் நாயன்மார்கள், அந்தணர், அரசர் முதலான பல்வேறு மரபுகளில் தோன்றியவர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் தங்களால் இயன்ற திருத்தொண்டுகளைச் செய்து முத்தி பெற்றவர்கள். சிவனடியார்கள் எக்குலத்தில் தோன்றியவர்களாயினும் அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதைப் பெரியபுராணம் இனிது விளக்குகின்றது.
அறுபான்மும்மை நாயன்மார்களும், குருலிங்க சங்கம பத்தியினால் வீடுபெற்றவராவர். குரு வழிபாட்டால் பன்னிருவரும், இலிங்க வழிபாட்டால் முப்பதின்மரும், சங்கம வழிபாட்டால் பத்தொன்பதின்மரும் முத்தி பெற்றுள்ளனர்.
பன்னிரு திருமுறைகளில் சிவனடியார்களின் வரலாற்றை உணர்த்தும் இந்நூல், பன்னிரண்டாவதாக விளங்குகின்றது.
திருத்தொண்டர் புராணம், இரண்டு காண்டங்களைக் கொண்டது. இந்நூலுக்கு உரை வரைந்தோர் பலராவர். கோவை சிவக்கவிமணி திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் விரிவான உரைவரைந்து, பலதொகுதிகளாக இதனை வெளியிட்டுள்ளார். மேலும் பலரும் இந்நூலுக்கு உரைகள் வரைந்துள்ளனர். தருமைஆதீனம் வெளியிடும் இத்திருமுறைக்கு ஆதீனப் புலவரும், அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான கயிலைமணி, முனைவர் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் சீரிய முறையில் உரை வரைந்துள்ளார்.
இத் திருமுறையின் இரண்டு காண்டங்களும், சென்னை, தொழிலதிபர் திரு. ஏ. சி. முத்தையா அவர்கள் குடும்பத்தினர் நன்கொடையால் வெளிவருகின்றன. முதற்காண்டம் திரு. ஏ.சி. முத்தையா அவர்களின் தந்தை - தாயார் அறக்கொடையால், ஞானசம்பந்தம் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது.
பன்னிரு திருமுறைகளையும் உரையோடு வெளியிட்டுச் சமய உலகிற்கு வழங்க வேண்டுமெனத் திருவுளம்பற்றிய, தருமைஆதீனம் 25ஆவது குருமகா சந்நிதானம், ஷ்ரீலஷ்ரீகயிலைக் குருமணி அவர்களின் அருளாட்சிக் காலத்தில் ஒன்று முதல் ஒன்பது திருமுறைகள் வெளிவந்தன.
தொடர்ந்து ஷ்ரீலஷ்ரீகயிலைக் குருமணியின் திருவுளக் கருத்தை முற்றுவிக்கும் வகையில் தருமையாதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம், ஷ்ரீலஷ்ரீசண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பத்தாம் திருமுறை முதலாக, ஏனைய திருமுறைளும் ஒருசேர அன்பர்கட்குக் கிடைக்குமாறு ஒளியச்சில் வெளியிட்டருளத் திருவுளம் பற்றிய வண்ணம், இத்திருமுறைப்பதிப்புத் தொகுதியில் இது பதினைந்தாவது பகுதியாகும்.
பன்னிரண்டாம் திருமுறையின் இரண்டாம் காண்டம் பதினா றாம் பகுதியாக வெளிவந்ததும் இத்தொகுதி வெளியிடும் பணி நிறைவுறும். ஒரே தொகுதியாகப் பன்னிரு திருமுறையானது உரையுடன் அனைவர்க்கும் கிடைக்கத் திருவருள் பாலிக்கும்.
இந்நாள்வரை இப் பன்னிரு திருமுறை ஒளியச்சுப் பதிப்புப் பணியில் ஈடுபட்டோரின் விபரங்கள் பின்வருமாறு:
பதிப்பு ஆலோசனை, மேற்பார்வை:
கயிலைமணி, சிவத்திருத்தொண்டர், கலையியல் முதுவல்,
அறிவியல் முதுவல், மறவன்புலவு க. சச்சிதானந்தன்,
யாழ்ப்பாணம்
துணைப் பதிப்பாசிரியர்:
ஷ்ரீமத். சுந்தரமூர்த்தித் தம்பிரான், தருமை ஆதீனம்
வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர் எம். ஏ., தருமை ஆதீனம்
வித்துவான் க. உமாமகேஸ்வரன், யாழ்ப்பாணம்
பண்டிதர், கலாநிதி மு. கந்தையா பி. ஏ., ஏழாலை, யாழ்ப்பாணம்
வித்துவான் க. ஆறுமுகம், வடபழனி, சென்னை
மெய்ப்பு:
வித்துவான் சேது இராமலிங்கம், மதுரை
வித்துவான் வ. த. இராமசுப்பிரமணியம் எம். ஏ., காஞ்சிபுரம்
வித்துவான் கன்னியப்பன், காஞ்சிபுரம்
வித்துவான் காசிநாத தேசிகர், மதுரை
வித்துவான் சு. மு. சுந்தரராசன், திருவாரூர்
வித்துவான் இராமதாசு, தஞ்சாவூர்
வித்துவான் குஞ்சிதபாதம், தஞ்சாவூர்
புலவர் தி. வே. ஷ்ரீனிவாசன், சேலம்
புலவர் ச. சீனிவாசன், நங்கைநல்லூர், சென்னை
கவனகர் கலை. செழியன், எம். ஏ., பெரம்பூர், சென்னை
கணினி அச்சுக் கோர்வைப் பணி
திரு. ரமேஷ் புருஷோத்தமன்,
8ஏ, தெற்குத்தெரு, திருவழுந்தூர், மயிலாடுதுறை 609001: செல்வி
சரஸ்வதி சந்தானகோபால்,
20சி, புளித் தெரு, மயிலாடுதுறை 609001:
செல்வி கிரிஜா கண்ணையன்,
20, அய்யாறப்பன் கோயில் கீழவீதி, மயிலாடுதுறை 609001: செல்வி
கீதா குருமூர்த்தி,
20டி, பட்டமங்கலம் புதுத் தெரு, மயிலாடுதுறை 609001:
செல்வி சசிகலா சிவராமன்
38ஏ, கே கே பி கோயில் தெரு, மயிலாடுதுறை 609001
செல்வி பாலசரஸ்வதி மாரிமுத்து,
33, காமராஜர் சாலை, மயிலாடுதுறை 609001
திரு. மணிவாசகன் ராஜி
வடக்குத்தெரு, மாப்படுகை, மயிலாடுதுறை 609001
திரு. முருகானந்தம் சுந்தரராஜன்
2/77, ஏ2, காந்தி வீதி, நல்லத்துக்குடி, மயிலாடுதுறை 609001
செல்வி உருக்குமணி தசரதன்
319, எம்பிடி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை 600081
திரு. பா. செல்வராஜா
16பி சிங்காரத்தோட்டம், காவலர் குடியிருப்பு,
வண்ணாரப்பேட்டை 600021
திருமதி. வேதவல்லி பாலாஜி,
1ஏ, கட்டபொம்மன் தெரு, ஒரகடம், சென்னை 600053
ஓவியங்களைப் புதுக்குதல், மீள்வரைதல், புதிதாய் வரைதல் பணி:
திரு ஐ. பத்மவாசன்
ஈ103/சி, 17ஆவது குறுக்கு, பெசண்ட் நகர், 600090
திரு. அ. சந்திரகாசன்
174, 2ஆம் தெரு, சாஸ்திரி நகர், வியாசர்பாடி 600039
திரு. கடலூர் மு. மணிமாறன்,
13/7 கிழக்கு மாதாகோயில் தெரு, இராயபுரம் 600013
அச்சு மற்றும் கட்டுப் பணி:
திருவல்லிக்கேணி, செந்தில் கட்டாளரகம்
திருவல்லிக்கேணி, மணி மறுதோன்றி அச்சகம்
இராயப்பேட்டை, மாருதி மறுதோன்றி அச்சகம்
சிந்தாதிரிப்பேட்டை, சக்தி வண்ண ஆய்வகம்
இராயப்பேட்டை, விநாயகா தங்கமுலாம் அச்சகம்
திருமறைக்காடு (வேதாரணியம்) குருகுலம் அச்சகம்
சென்னையில், 1996 தை தொடக்கம் 2006 ஆனி வரை அலுவலகப் பணி:
திரு. கி. சரவணன் (அலுவலகம்)
2, எல்லீஸ்புரம், அண்ணாசாலை 600002
திரு. சொ. ரமேஷ் (கணினி அச்சு)
20, திப்பு தெரு, அண்ணாசாலை 600002
திரு. எம். சுரேஷ்பாபு (கணினி அச்சு)
116, கலவை தெரு, சிந்தாதரிப்பேட்டை 600002
திரு. வ. பா. கண்ணன் (அலுவலகம்)
8பி, கணக்கர் சந்து, திருவொற்றியூர் 600019
திருமதி சசிரேகா பாலசுப்பிரமணியன் (அலுவலகம்)
7 ஈசுவரதாசர் தெரு, திருவல்லிக்கேணி 600005
திரு. ஆ. சசிகுமார் (அலுவலகம்)
2, மனோகரன் தெரு, சேத்துப்பட்டு 600031
ஒருங்கிணைப்புப் பணி:
திரு. அருச்சுனர், மேலாளர், தருமை ஆதீனம், மயிலாடுதுறை
வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர், தருமை ஆதீனம்,
சேக்கிழார் அடிப்பொடி, முனைவர் தி. ந. இராமச்சந்திரன், தஞ்சாவூர்
வித்துவான் க. ஆறுமுகம், வடபழனி, சென்னை
1996ஆம் ஆண்டு, தைப்பூசத் திருநாளில், மயிலாடுதுறை, தருமபுர ஆதீன வளாகத்தில், பன்னிரு திருமுறைகளை, 16 பகுதிகள் கொண்ட ஒரே தொகுப்பாக வெளியிடும் அச்சிடல் தயாரிப்புப் பணி தொடங்கியது; ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணியின் திருவுளக் கருத்தை முற்றுவிக்கும் வகையில், தருமையாதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம், ஷ்ரீலஷ்ரீசண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இப்பணி செவ்வனே நடைபெறத் துணைநின்று, பதிப்புப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் உத்வேகமும் அருளினார்கள்.
இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று, இந்தப் பகுதியையும் நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.
சைவமெய்யன்பர்கள் இவ்வருள் நூலைப் பெற்றுக் கற்றுப் பயனுறுவார்களாக.
தவத்திரு
குருமகாசந்நிதானத்தின்
கட்டளை விசாரணை, ; அருளாணையின் வண்ணம்
வேளூர் தேவஸ்தானம் திருநாவுக்கரசுத் தம்பிரான்